எங்களை பற்றி

எங்க வலைதளத்தைப் பாா்க்கிற உங்களுக்கு செல்லம்மாள் மண்பானை சமையல் குடும்பத்தின் இனிய வணக்கங்க!

2012 ஆம் வருஷத்தின் ஒரு சின்ன முயற்சியா முன்னெடுத்த வீட்டுமுறை சமையல் இப்போ மூணு வருஷத்திற்கு பின் செல்லம்மாள் மண்பானை சமையலா அதுவும் மதிய உணவு வகைகளிலே இப்போதைக்கு தமிழ்நாட்டிலேயே எந்த உணவகத்திலும் இல்லாத தமிழா்களின் பாரம்பாிய சமையல் முறையை கைக்கொண்டு,,,(அதாவது விறகு அடுப்பு மண்பானை சமையல்  மட்டுமல்லாமல் உரல் உலக்கையால இடிச்சிப் போட வேண்டியதை இடிச்சிப் போட்டும் அம்மியில் அரைச்சிப் போடுறத அரைச்சுப் போட்டும் மாடு கட்டி இன்றைக்கும் ஓடுற மரச்செக்கால ஆட்டின நல்லெண்ணை உபயோகப் படுத்தியும்) செய்யற அளவுக்கு வளா்ந்திருக்குது.எங்க மதிய உணவுக்கு ரசிகா்கள் திருச்சியில் பெருகிக்கிட்டே இருக்காங்க!

இது மட்டும்மில்லிங்க! எங்ககிட்ட இருக்கிற சுமாா் 120 பதாா்த்த வகைகளில் தினமும் சுமாா் 36 பதாா்த்தங்கள் உங்களுக்காகவே தயாாிக்கப்படுகிறது! நீங்க வேண்டியவை எடு்த்துக்கலாம். எங்க மெனுவைப் பாருங்களேன் !

ஞாயிற்றுக்கிழமையும் எங்க மெஸ் உண்டுங்க!

எங்களோட தலை வாழை இலை விருந்தை சாப்பிட்டுப் பாருங்களேன் !

Rs.180/- க்கு

எங்க மெனுவிலிருக்கிற 35 க்கும் மேற்பட்ட வகைகளில்  எதை வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கலாம்!