பட்டியல்

image8aமதிய உணவில் வகை, வகையான கூட்டு, பல வித குழம்புகள் பெரிய ஓட்டல்களில் பரிமாறப்பட்டாலும், பாரம்பரிய முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்யக்கூடிய ஓட்டல்களை காண்பது இப்பவெல்லாம் ரொம்ப சிரமம். அப்படிப்பட்ட உணவகங்களை தேடிப்பார்த்து தான் கண்டுபிடிக்க முடியும். ஆம்… அந்த வகையில்  நாங்கள் எங்கள் உணவகத்தில் சிறுதானிய வகைகளுடன் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இங்குள்ள பாரம்பரிய உணவு வகைகள் வாடிக்கையாளர்களை மிகவும் கவருகின்றன. உணவகத்தின் உள்ளே நுழைந்ததும் இன்றைய ஸ்பெஷல் என்று பல உணவு வகைகளை பெரிய போர்ட்டில் தொங்க விட்டுள்ளோம்.

கீரைகளில் தினமும் ஐந்து வகைகள் வாழைத்தண்டு ,வாழைப்பூ,பச்சடி,வடை, சிறுதானியங்களில் செய்யற அவலும் வெல்லமும் போட்டு செய்யற பாயாசம்,பருப்பு உருண்டை குழம்பு ,வாழைப்பூ உருண்டை குழம்பு பொாித்த குழம்பு ,விதவிதமான புளிக்குழம்பு ,வத்தல் குழம்பு ,மோா் குழம்பு ,இப்படி போய்க்கிட்டே இருக்கும் எங்க மெனு!

ரசத்தில் பிரண்டை ரசம், கொள்ளு ரசம்,வேப்பம்பூ ரசம்,இப்படி பல வகை ,மிளகு சீரகம் போட்டு செய்த அப்பளத்தை  சுட்டுத்தருகிறோம்…

பாகற்காய்,வெண்டை,கேரட்,கோஸ்,புடலை ,பீா்கன், இன்னும் பல காய்களில் செய்யற கூட்டு பொாியல் பிரண்டை,எள்,சேனை,கத்திாி,வாழைக்காய் ,பாகல் வறுவல்களும் உண்டு.

மண்சட்டித் தயிா்ன்னாலே எங்க தயிா்தான் முதல் ! ஏன்னா கறந்த பசும்பாைலை நன்றாக காய்ச்சி மண்சட்டியில் புரை ஊத்தி அருமையாக பண்ணியிருக்கோம் !

 மர மத்தில் கடைஞ்சு வெண்ணெய் எடுத்துத்தான் மோா் கொடுக்கிறோம்.

அட நாங்க பாட்டுக்கு சொல்லிக்கிட்டே போனா ,போயிக்கிட்டே இருக்கலாம் !

நோ்ல வந்துதான் சாப்பிட்டுப் பாருங்களேன் !

அப்புறம் இன்னொரு ஆச்சாியமான விஷயத்தையும் கடைசியா சொல்லி முடிக்கிறேன்.

இது ஒரு அனைத்து மகளிா் சமையல் ப்ராஜக்ட்!